நாடுகாணி தாவரவியல் பூங்காவில் காட்சி கோபுரத்தில் மலைப்பாம்பு ஓவியம்


நாடுகாணி தாவரவியல் பூங்காவில் காட்சி கோபுரத்தில் மலைப்பாம்பு ஓவியம்
x
தினத்தந்தி 22 March 2022 9:39 PM IST (Updated: 22 March 2022 9:39 PM IST)
t-max-icont-min-icon

நாடுகாணி தாவரவியல் பூங்காவில் காட்சி கோபுரத்தில் மலைப்பாம்பு உருவம் ஓவியமாக வரையப்பட்டு உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

கூடலூர்

நாடுகாணி தாவரவியல் பூங்காவில் காட்சி கோபுரத்தில் மலைப்பாம்பு உருவம் ஓவியமாக வரையப்பட்டு உள்ளது. இதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.

ஜீன்பூல் மைய பூங்கா

கூடலூர் தாலுகா நாடுகாணி பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் ஜீன் பூல் மைய பூங்கா உள்ளது. ஆர்கிட்டோரியம், மீன் கண்காட்சியகம், வன விலங்குகளின் உடல் பாகங்கள் கொண்ட மியூசியம், பெரணி இல்லங்கள், அரியவகை தாவரங்களின் திசு வளர்ப்பு ஆராய்ச்சி மையம்உட்பட இயற்கை பிரதேசங்கள் கொண்டதாக திகழ்கிறது. 

இதனால் பள்ளி கூட மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கல்வி சுற்றுலாவாகவும், வன ஆர்வலர்களுக்கு சிறந்த ஆராய்ச்சி கூடமாகவும் விளங்குகிறது. இந்த நிலையில் சூழல் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஜீன்பூல் பூங்காவை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அனுமதி வழங்கி உள்ளனர்.

மலைப்பாம்பு ஓவியம் 

இதனால் சீசன் காலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து இந்த பூங்காவை பார்த்து விட்டு செல்கின்றனர். இதைத்தொடர்ந்து வனத்துறை யினர் பல்வேறு தன்னார்வலர்களின் உதவியுடன் தாவரவியல் பூங்காவில் வளர்ச்சி பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

 பூங்கா வனப்பகுதியை கண்டு ரசிக்கும் வகையில் காட்சி கோபுரம் ஏற்கனவே உள்ளது. சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தன்னார்வ அமைப்பினருடன் இணைந்து வனத்துறையினர் காட்சி கோபுரம் மீது மலைப்பாம்பு உருவ ஓவியத்தை மிக அழகாக தத்ரூபமாக வரைந்து உள்ளனர். 

பல ஓவியங்கள் வரைய வேண்டும்

இக்காட்சி கோபுரத் திறப்புவிழா நடைபெற்றது. இதில் கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் காட்சி கோபுரத்தின் மீது ஏறி ரசித்தனர். 

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, காட்சி கோபுரத்தில வரையப்பட்ட மலைப்பாம்பு உருவத்தை பார்க்கும்போது, ராட்சத மலைப்பாம்பு வனப்பகுதியின் நடுவில் படுத்துக் கிடப்பது போல் தத்ரூபமாக காட்சியளிக்கிறது. இதுபோன்று இன்னும் பல ஓவியங்களை இந்த பூங்காவில் வரைய வேண்டும் என்றனர். 


Next Story