புதுச்சேரியில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு


புதுச்சேரியில் பெட்ரோல்- டீசல் விலை உயர்வு
x
தினத்தந்தி 22 March 2022 9:56 PM IST (Updated: 22 March 2022 9:56 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்தது

புதுச்சேரி, மார்ச்.22-
புதுவையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 4 மாதங்களாக உயர்த்தப்படாமல் இருந்தது. இந்தநிலையில் நேற்று எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தின.
அதன்படி புதுவையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் 75 காசுகள் உயர்ந்துள்ளது. அதாவது நேற்று  ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.94.94-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 95.72-க்கும், டீசல் ரூ.83.59-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 84.34-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Next Story