கரும்பு தோட்டத்தில் தீ
தேவதானப்பட்டி அருகே கரும்பு தோட்டத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
தேவதானப்பட்டி:
தேவதானப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அப்பாஸ். இவர், அதே பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் 5 ஏக்கரில் கரும்பு நடவு செய்திருந்தார். கரும்பு விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை அவரது கரும்பு தோட்டத்தில் தீப்பிடித்தது. இதுகுறித்து அறிந்த அவர், பெரியகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் நிலைய அலுவலர் பழனிசாமி தலைமையிலான தீயணைப்பு படைவீரர்கள் கரும்பு தோட்டத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் 2 ஏக்கரில் இருந்த கரும்புகள் எரிந்து சாம்பலானது. இதுகுறித்து ஜெயமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story