ரமேஷ் ஜார்கிகோளி திடீர் டெல்லி பயணம் மந்திரி பதவியை கைப்பற்ற முயற்சி
ரமேஷ் ஜார்கிகோளி திடீர் டெல்லி மந்திரி பதவியை கைப்பற்ற முயற்சி மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
பெங்களூரு:
முதல்-மந்திாியாக இருந்த எடியூரப்பா மந்திரிசபையில் நீர்ப்பாசனத்துறை மந்திரியாக பணியாற்றியவர் ரமேஷ் ஜார்கிகோளி. பாலியல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த நிலையில் அவர் மீதான பாலியல் குற்றச்சசாட்டு வழக்கு விசாரணை முடிக்கப்பட்டுவிட்டது. அவர் குற்றமற்றவர் என்று போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் மீண்டும் மந்திரி பதவியை கைப்பற்ற ரமேஷ் ஜார்கிகோளி திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் நேற்று பெலகாவியில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு அமித்ஷா உள்பட கட்சியின் தலைவர்களை சந்தித்து இதுபற்றி பேச அவர் திட்டமிட்டுள்ளார். கர்நாடக மந்திரிசபை விரைவில் மாற்றப்பட உள்ளது. மந்திரிசபையில் உள்ள 10 பேரை நீக்கிவிட்டு புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்க பா.ஜனதா மேலிடம் திட்டமிட்டுள்ளது.
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைய முக்கிய காரணமாக இருக்கும் ரமேஷ் ஜாா்கிகோளிக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏனென்றால் பெலகாவி மாவட்டத்தில் ரமேஷ் ஜார்கிகோளிக்கு மக்களிடையே செல்வாக்கு உள்ளது. அவருக்கு மந்திரி பதவி வழங்கினால் பெலகாவி மாவட்டத்தில் அதிக தொகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற முடியும் என்று அக்கட்சி தலைவர்கள் கணக்கு போட்டு வருகிறார்கள்.
Related Tags :
Next Story