ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா
x
தினத்தந்தி 22 March 2022 10:23 PM IST (Updated: 22 March 2022 10:23 PM IST)
t-max-icont-min-icon

கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்:
 கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் ஜோதிமணி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் குமரன், மாவட்ட செயலாளர் வேல் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் குழு அமைப்பாளர் வளர்மாலா வரவேற்றார். மாநில தணிக்கையாளர் ஜம்ரூத் நிஷா, மாநில செயற்குழு உறுப்பினர் அரிகிருஷ்ணன் ஆகியோர் பேசினர்.
கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ள அனைத்து உரிமைகளையும் கிராம ஊராட்சி செயலர்களுக்கும் வழங்க அரசாணை வெளியிட வேண்டும். 
பணி வரன்முறை
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து, பணி வரன்முறை செய்ய வேண்டும். காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர் பணியிடங்களை தேர்வாணையம் மூலம் நிரப்ப வேண்டும்.
பிற துறைகளின் பணிகளை ஒரே வளர்ச்சித் துறையின் மீது திணிக்கக்கூடாது. ஊழியர் விரோத போக்கை கைவிட வேண்டும். முன்னாள் மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் மீது கடந்த ஆட்சி காலத்தில் எடுக்கப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story