நாக்பூர் - ஷீரடி விரைவு சாலை மே மாதம் திறக்கப்படும்- மந்திரி ஏக்னாத் ஷிண்டே தகவல்
நாக்பூர் - ஷீரடி விரைவு சாலை மே மாதம் திறக்கப்படும் என மந்திரி ஏக்னாத் ஷிண்டே கூறினார்.
மும்பை,
நாக்பூர் - ஷீரடி விரைவு சாலை மே மாதம் திறக்கப்படும் என மந்திரி ஏக்னாத் ஷிண்டே கூறினார்.
மாநிலங்களுடன் இணைப்பு
மும்பை - நாக்பூர் இடையே பல ஆயிரம் கோடி ரூபாய் செலவில் விரைவு சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் முதல்கட்டமாக நாக்பூர்- அகமது நகர் மாவட்டம் ஷீரடி இடையே சாலை போடும் பணி நடந்து வருகிறது.
இந்த திட்டம் தொடர்பாக நேற்று சட்டசபை வளாகத்திற்கு வெளியே மந்திரி ஏக்னாத் ஷிண்டே கூறியதாவது:-
மும்பை - நாக்பூா் விரைவு சாலையை கட்சிரோலி வரை நீட்டிக்க மாநில அரசு திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் விரைவு சாலை தெலுங்கானா, ஆந்திரா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுடன் இணைக்கப்படும்.
மே மாதம் திறக்கப்படும்
மும்பை - நாக்பூர் இடையேயான சாலை பணிகள் ஓராண்டில் முடிந்துவிடும். இதேபோல முதல் கட்ட பணிகள் (நாக்பூர் - ஷீரடி) முடிந்து அந்த சாலை வரும் மே மாதம் திறந்து வைக்கப்படும். விரைவு சாலையோரம் மாநில அரசு 11½ லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story