அரூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு


அரூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 22 March 2022 10:31 PM IST (Updated: 22 March 2022 10:31 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான்.

அரூர்:
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அருணா. இவருடைய மகன் ஏழுமலை (வயது 12). 7-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று காலை மாணவன் குளித்துவிட்டு துணியை கம்பியின் மீது காய வைத்தான். அப்போது மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழந்தான். இதுபற்றி தகவல் அறிந்த அரூர் போலீசார் மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story