ஓசூரில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் சாவு
ஓசூரில் எந்திரத்தில் இருந்து தவறி விழுந்து எலக்ட்ரீசியன் பலியானார்.
ஓசூர்:
ஊத்தங்கரை தாலுகா கோட்டபதியை சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகன் சந்தோஷ் (வயது 30). இவர் ஓசூர் சிப்காட் பேடரப்பள்ளி காமராஜ் நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர், நிறுவனத்தில் எந்திரத்தின் மேல் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். ஓசூர் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனளிக்காமல் பலியானார். இதுகுறித்து ஓசூர் சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story