தர்மபுரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,:
அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் தர்மபுரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய தலைவர் ரவி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் காளியப்பன், திருமால், ஆதிமூலம், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க மாவட்ட செயலாளர் முத்து, துணைச்செயலாளர் கோவிந்தசாமி, பொருளாளர் முத்து ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தர்மபுரி ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேலை அட்டை வைத்திருக்கும் தொழிலாளர்களுக்கும் 100 நாள் வேலை வழங்க வேண்டும். தினசரி கூலி ரூ.600 வழங்க வேண்டும். 60 வயது பூர்த்தி அடைந்த அனைத்து தொழிலாளர்களுக்கும் மாதம்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் கணேசன், ஒன்றிய பொருளாளர் மனோகரன், பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பழனி, மீனாட்சி, சுசீலா மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story