நெல்லிக்குப்பம் நகராட்சியில் வாடகை பாக்கி செலுத்தாத 8 கடைகளுக்கு சீல் வைப்பு
நெல்லிக்குப்பத்தில் வாடகை பாக்கி செலுத்தாததால் 8 கடைகளுக்கு நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.
நெல்லிக்குப்பம்,
நெல்லிக்குப்பம் நகராட்சியில் சொத்துவரி, காலிமனை வரி, குடிநீர் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட பல்வேறு வரி மற்றும் வாடகை பாக்கி சுமார் ஒரு கோடியே 64 லட்சம் ரூபாய் உள்ளது.
இந்த நிலையில் வாடகை பாக்கி செலுத்தாத 8 கடைகளுக்கு நகராட்சி சார்பில் நோட்டீஸ் விடுக்கப்பட்டது. இருப்பினும் அந்த கடைகளின் உரிமையாளர்கள் வாடகை பாக்கி செலுத்தவில்லை.
கடைகளுக்கு சீல்
இதனால் நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி, வாடகை பாக்கி செலுத்தாத கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். அதன்பேரில் நகராட்சி வருவாய் ஆய்வாளர் (பொறுப்பு) நாராயணசாமி தலைமையில் நகராட்சி ஊழியர்கள் வாடகை பாக்கி செலுத்தாத 8 கடைகளுக்கு சீல் வைத்தனர்.
இதற்கிடையே ஒரு கடையின் உரிமையாளர் வாடகை பாக்கி ரூ.41 ஆயிரம் உடனடியாக நகராட்சியில் செலுத்தியதால், அந்த கடையின் சீல் மட்டும் அகற்றப்பட்டு கடை மீண்டும் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நெல்லிக்குப்பம் நகராட்சியில் வரி மற்றும் வாடகை பாக்கி செலுத்தாத நபர்கள் உடனடியாக தொகையை செலுத்தாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் பார்த்தசாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story