காய்கறி மொத்த வியாபாரியிடம் ரூ.6½ லட்சம் பறிப்பு
காய்கறி மொத்த வியாபாரியிடம் இருந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தானே,
காய்கறி மொத்த வியாபாரியிடம் இருந்து கத்தியை காட்டி மிரட்டி ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் பறித்து சென்ற 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
ரூ.6.50 லட்சம்
நாசிக்கை சேர்ந்தவர் சுனில் சேவாலா(வயது32). காய்கறி மொத்த வியாபாரி. இவர் நவிமும்பை வாஷியில் உள்ள ஏ.பி.எம்.சி மார்க்கெட்டிற்கு தினந்தோறும் காய்கறி வினியோகம் செய்வார். அதற்குரிய பணத்தை வாரத்தில் ஒருநாள் வியாபாரிகளிடம் வசூல் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
இதன்படி கடந்த 20-ந்தேதி நவிமும்பை வாஷி மார்க்கெட்டில் வியாபாரிகளிடம் பணம் வசூலிக்க வந்திருந்தார். பின்னர் வியாபாரிகளிடம் இருந்து ரூ.6 லட்சத்து 50 ஆயிரம் வசூலித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் பிவண்டி வழியாக நாசிக் சென்றுகொண்டிருந்தார்.
2 பேருக்கு வலைவீச்சு
பிவண்டி மான்கோலி மேம்பாலம் அருகே வந்த போது, ஸ்கூட்டியில் வந்த 2 மர்ம நபர்கள் அவருடைய வாகனத்தை வழிமறித்தனர். பின்னர் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்து சென்றனர்.
இது பற்றி அவர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தை பறித்து சென்ற ஆசாமிகளை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story