பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்


பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம்
x
தினத்தந்தி 22 March 2022 10:53 PM IST (Updated: 22 March 2022 10:53 PM IST)
t-max-icont-min-icon

விக்கிரவாண்டி, விழுப்புரம் பள்ளிகளில் மேலாண்மை குழு கூட்டம் நடந்தது.

விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டி அடுத்த தொரவி நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் செல்லையா தலைமையில் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உதவி திட்ட அலுவலர் தனவேல், மாவட்ட பொறியாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கல்வி, பள்ளி மேலாண்மை குறித்து பேசினர். கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 
இதேபோல் பனப்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழழகன், பள்ளிகல்வித்துறை ஒருங்கிணைப்பாளர் சமக்ரா சிகா ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஊராட்சி மன்ற தலைவர் பூவராகவன், துணை தலைவர் குணா, கல்வியாளர் பழனி உள்பட பலர் பங்கேற்றனர். விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திற்கு முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் குமாரசாமி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை ராதா, முன்னாள் துணை தலைவர் சர்க்கார் பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் சலாம் தலைமையில் நடந்த கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியை கீதா, பேரூராட்சி துணை தலைவர் பாலாஜி, முன்னாள் துணை தலைவர் சர்க்கார் பாபு, நகர செயலாளர் நைனாமுகமது உள்பட பலர் கலந்து கொண்டனர்.  விழுப்புரம் பூந்தோட்டத்தில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை மறு சீரமைப்புக்குழு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணகுமாரி தலைமை தாங்கினார். உதவி ஆசிரியர்கள் அன்பரசன், சகாயஉஷா, ரவி, மகாதேவன் மற்றும் 160 பெற்றோர்கள் கலந்துகொண்டனர். நகரமன்ற வார்டு கவுன்சிலர் கோதண்டராமன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இக்கூட்டத்தில் பள்ளியின் அடிப்படை தேவைகள் பற்றி விளக்கி கூறப்பட்டது. மேலும் பள்ளிக்கு மிக அவசர தேவையாக ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை பற்றாக்குறையை விரைந்து நிவர்த்தி செய்ய மேலாண்மை மறு சீரமைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Next Story