இறுதி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல்


இறுதி ஊர்வலத்தில் இருதரப்பினர் மோதல்
x
தினத்தந்தி 22 March 2022 10:58 PM IST (Updated: 22 March 2022 10:58 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே இறுதி ஊர்வலத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக ஊராட்சி மன்ற தலைவி உள்பட 41 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திண்டிவனம், 

திண்டிவனம் அருகே உள்ள வைரபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சாந்தலிங்கம்(வயது 70). இவர் உடல்நலக்குறைவால் இறந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர். 
அப்போது டிரம்ஸ் இசைக்கு ஏற்ப சிலர் நடனமாடினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினராக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தடியால் தாக்கி மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பை சேர்ந்த சுந்தரம்(51), ஏழுமலை(40), குமரேசன்(31), பிரகாஷ்(20) ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். 

41 பேர் மீது வழக்கு 

இதுகுறித்து சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் பாக்கியராஜ், ராஜீவ்காந்தி, ஆறுமுகம், பூமிநாதன், சற்குணன், அருள், பூவரசன், பிரவின், பிரகாஷ், குமார், செல்வம், சரவணன் உள்பட 19 பேர் மீதும், பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் தருமன், சுந்தரம், ஊராட்சி மன்ற தலைவி வசந்தி, ஏழுமலை, சூர்யா, குமரேசன், மருது, சேட்டு, அமுல், மணிமேகலை, மஞ்சு, வான்மதி, சிவகாமி, பிரபாகரன், ஆகாஷ், பவித்ரா, வசந்த், அபி உள்பட 22 பேர் மீதும் வெள்ளிமேடுபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் பிரகாஷ்(20), பிரவின்(21) ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவி வசந்தி உள்பட 39 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story