சின்னசேலத்தில் சமுதாய வளைகாப்பு விழா
சின்னசேலத்தில் சமுதாய வளைகாப்பு விழா
சின்னசேலம்
சின்னசேலம் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா சின்னசேலம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் தலைமை தாங்கி 250 கர்ப்பிணிகளுக்கு தலா ரூ.1,000 மதிப்பிலான சீர்வரிசை பொருட்களை வழங்கி பேசினார். சின்னசேலம் ஒன்றியக்குழு தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி பெருமாள், சின்னசேலம் பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யாஜெய்கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் அகிலா வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் மதியழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் துரைசாமி, அட்மா தலைவர் கனகராஜ், மாவட்ட கவுன்சிலர் கலையரசி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட பணியாளர்கள், அங்கன்வாடி மைய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கர்ப்பிணி பெண்கள் அனைவருக்கும் அறுசுவை உணவு வழங்கினர்.
Related Tags :
Next Story