சேத்தியாத்தோப்பு அருகே மூதாட்டியிடம் நகை பறிப்பு மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
சேத்தியாத்தோப்பு அருகே மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற மர்மநபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அடுத்த சோழத்தரம் அருகே உள்ள கோவிந்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ் மனைவி பாக்கியமேரி (வயது 70). இவர் சம்பவத்தன்று அதேஊரில் உள்ள ஒருவயலில் களை எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்மநபர் பாக்கியமேரி நைசாக பேச்சு கொடுத்ததோடு, திடீரென அவருடைய காதில் இருந்த நகைகளை பறித்துச் சென்று விட்டார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சோழத்தரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் நகையை பறித்துச் சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story