பொது வேலைநிறுத்த வாயிற் விளக்க கூட்டம்


பொது வேலைநிறுத்த வாயிற் விளக்க கூட்டம்
x
தினத்தந்தி 22 March 2022 11:06 PM IST (Updated: 22 March 2022 11:06 PM IST)
t-max-icont-min-icon

அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கம் சார்பில் பொது வேலைநிறுத்த வாயிற் விளக்க கூட்டம் நடந்தது.

விழுப்புரம், 

தொழிலாளர் சட்ட தொகுப்புகளான 4 தொகுப்புகளையும் கைவிட வேண்டும், மின்சார திருத்த சட்டத்தையும், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தையும் திரும்ப பெற வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு கட்டுப்படியான விலை வழங்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும், தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கக்கூடாது, வருமான வரி செலுத்தும் அளவிற்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.7,500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும், பெட்ரோலிய பொருட்கள், சமையல் கியாஸ் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 28, 29-ந் தேதிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடக்கிறது.
இந்த வேலை நிறுத்தத்தையொட்டி விளக்க வாயிற்கூட்டம் நேற்று மாலை விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது. கூட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபாதண்டபாணி தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் மூர்த்தி, நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் வாலிபால் மணி, தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன், சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் ரகோத்தமன், மறுமலர்ச்சி தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் மனோகரன், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் முருகானந்தம், அறிவர் அம்பேத்கர் தொழிற்சங்க பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் போராட்ட விளக்கவுரையாற்றினர். தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் செயலாளர் ஞானப்பிரகாசம், தலைவர் கிருஷ்ணன், ஐ.என்.டி.யு.சி. மாநில பேரவை துணைத்தலைவர் ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. பொருளாளர் ஜான்போஸ்கோ நன்றி கூறினார்.

Next Story