எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 March 2022 11:11 PM IST (Updated: 22 March 2022 11:11 PM IST)
t-max-icont-min-icon

எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று மாலை எஸ்.டி.பி.ஐ. கட்சிசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ. கட்சியின் விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அக்பர்அலி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய த.மு.மு.க. விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் முஸ்தாக்தீன், மாவட்ட துணை செயலாளர் பஜிலுதீன் ஆகியோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் அஸ்லாம்பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர்கள் கள்ளக்குறிச்சி முகமதுரபீக், கடலூர் ரகமத்துல்லா, அரியலூர் ரபீக், விழுப்புரம் வடக்கு அசான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் உசேன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்ட தலைவர் அபுபக்கர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
இதில் நிர்வாகிகள் ஜாகிர்உசேன், அலீம், ஜான்பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர நிர்வாகி உஸ்மான் நன்றி கூறினார்.

Next Story