வள்ளலார் கோவிலில் அன்னமளிப்பு விழா
ஆனதாண்டவபுரத்தில் வள்ளலார் கோவிலில் அன்னமளிப்பு விழா நடந்தது.
மயிலாடுதுறை:-
மயிலாடுதுறை அருகே ஆனதாண்டவபுரம் கிராமத்தில் வள்ளலார் கோவிலில் 59-வது ஆண்டு அன்னமளிப்பு விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த சன்மார்க்க கொடியேற்றம், அணையா விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி, வள்ளலாரின் உருவப்படம் வீதிஉலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை மற்றும் வழிபாடு நடந்தது. பின்னர் அன்னதான விழா நடந்தது. இந்த விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் மகேஸ்வரி முருகவேல், ஊராட்சி மன்ற தலைவர் ராணி ராஜகோபால், ஊராட்சி மன்ற துணை தலைவர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story