கற்பக விநாயகர் கோவில் குடமுழுக்கு
திருவெண்காடு கற்பக விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
திருவெண்காடு:
திருவெண்காடு மேலவீதியில் கற்பக விநாயகர் கோவில் குடமுழுக்கு நடந்தது. முன்னதாக யாக பூஜைகள், பூர்ணாகுதி நடந்தது. பின்னர் மேளதாளம் முழங்க குரு சிவாச்சாரியார் தலைமையில் புனித நீர் அடங்கிய குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடந்தது. தொடர்ந்து மூலவர் கற்பக விநாயகருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் சோமாஸ் கந்தன், சீர்காழி ஒன்றிய குழுதலைவர் கமல ஜோதி தேவேந்திரன் உள்பட திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story