வேலூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
வேலூரில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே இந்தியபள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் ரஞ்சன்தயாளதாஸ் வரவேற்றார். தேசிய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் கலந்துகொண்டு கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.
இதில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் அஜீஸ்குமார் மற்றும் பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story