மயிலாடுதுறையில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில், இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை:
கர்நாடக ஐகோர்ட்டு ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை கண்டித்து மயிலாடுதுறை சின்னக்கடைவீதியில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மயிலாடுதுறை மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அப்துல் சாதிக் தலைமை தாங்கினார். இதில் பெண் விடுதலை இயக்கம் அமைப்பாளர் சபரிமாலா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில செயற்குழு உறுப்பினர் தஸ்லிமா செரீப், தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை மாநில பொருளாளர் ஷான்ராணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட தலைவர் ஷேக் அலாவுதீன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் நவாஸ்கான், முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட செயலாளர் நூருல்லா, மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஆக்கூர் ஷாஜகான் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள், ஜமாத்தார்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story