திருத்தணி அருகே ரெயில் மோதி கல்லூரி மாணவர் பலி
திருத்தணி அருகே ரெயில் மோதி கல்லூரி மாணவர் பலியானார்.
அரக்கோணம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த சீக்கராஜ குப்பம் பகுதியை ேசர்ந்தவர் ஜீவானந்தம். அவரது மகன் தோனி என்கிற தோனீஸ்வரன் (வயது 19). திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு தோனி பொன்பாடி ரெயில் நிலையம் அருகே தண்டவாளளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story