தக்கோலம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தக்கோலம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
அரக்கோணம்
ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தை அடுத்த நகிரி குப்பத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. அவரது மகன் கார்த்திக் (வயது 26). சம்பவத்தன்று கார்த்திக் மதுவில் விஷம் கலந்து குடித்ததாக தெரிகிறது. உடனே அவர் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story