விராலிமலை, ஆவுடையார்கோவில், திருவரங்குளம், ஆதனக்கோட்டையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம்
விராலிமலை, ஆவுடையார்கோவில், திருவரங்குளம், ஆதனக்கோட்டையில் பள்ளி ேமலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
விராலிமலை:
மேலாண்மை குழு கூட்டம்
விராலிமலை அருகே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி தலைமை தாங்கினார். வடுகப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி குமார் மற்றும் செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பொறுப்புகள் குறித்தும், பள்ளி மேம்பாட்டுத் திட்டம், பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு குறித்தும் கூட்டத்தில் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்ட பெற்றோர்கள், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். இதில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஆவுடையார்கோவில்
ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் லெட்சுமிகாந்தன் வரவேற்றார். கூட்டத்தில் வட்டார கல்வி அலுவலர் முத்துக்குமார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் செல்வராஜ், பள்ளி புரவலர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழாசிரியர் பூங்கொடி நன்றி கூறினார்.
திருவரங்குளம்
திருவரங்குளம் வட்டார பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் முருகையன் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி கலந்துகொண்டு தமிழக அரசின் பள்ளி மேலாண்மை குழு அமைப்பதன் அவசியம் குறித்த பேசினார்.
இதேபோல் அரசு ஆரம்ப பள்ளியில் திருவரங்குளம் அரசு ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியர் செல்வராணி தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ஆதனக்கோட்டை
ஆதனக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் தலைமையாசிரியர் பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் முனியாண்டி, ஆதனக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கண்ணன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தமிழ்வாணன், பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமையில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story