திருப்புனவாசல் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருப்புனவாசல் கிராமத்தில் மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
ஆவுடையார்கோவில்:
மாட்டு வண்டி பந்தயம்
ஆவுடையார்கோவில் அருகே திருப்புனவாசல் கிராமம் மன்மத சுவாமி காமன் பண்டிகை, திருப்புனவாசல்ராசு பிள்ளை நினைவாகவும், கோவில் மண்டகப்படிதாரர்கள் மற்றும் தர்மசாஸ்தா இளைஞர் மன்றம், திருப்புனவாசல் கிராமத்தை சேர்ந்தவர்கள் சார்பில் 2-ம் ஆண்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 30-க்கும் மேற்பட்ட மாடுகள் பந்தயத்தில் பங்கேற்றன. இதில் திருப்புனவாசல் கிராமத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் பந்தயஎல்லை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
பரிசு
இதில் பெரியமாடு, சின்னமாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடைபெற்றது. பந்தயத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கு ரொக்கப்பணம் பரிசு மற்றும் கேடயம், குத்துவிளக்கு, ஆட்டு குட்டியும் வழங்கப்பட்டது.
மேலும் மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு கொடிப்பரிசு கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். மாட்டு வண்டி பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள் உற்சாகமாக கண்டு களித்தனர். கோட்டைப்பட்டினம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story