விராலிமலை அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


விராலிமலை அருகே  அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-பணம் கொள்ளை மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 22 March 2022 11:54 PM IST (Updated: 22 March 2022 11:54 PM IST)
t-max-icont-min-icon

விராலிமலை அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

விராலிமலை:
தச்சுதொழிலாளி
விராலிமலை தாலுகா செவனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் துரை சவரி முத்து (வயது 45). தச்சுதொழிலாளி. இந்நிலையில் நேற்று  இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் தனது மனைவியுடன் சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. 
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவின் கதவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 11 பவுன் நகை மற்றும் ரூ.5 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது ெதரியவந்தது. இதுகுறித்து விராலிமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 
நகை-பணம் கொள்ளை
இதேபோல் செவனம்பட்டி கிராமம் துரை சவரி முத்து வீட்டின் அடுத்துள்ள வீட்டில் வசித்து வருபவர் ஆரோக்கியசாமி (67). கணவன்-மனைவி இருவரும் வீட்டை பூட்டி விட்டு கூலி வேலைக்கு சென்று உள்ளனர். ேவலைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி வந்துபோது வீட்டின் பூட்டை உடைத்து கதவு திறந்து கிடந்ததது. இதையடுத்து வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.3 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
விராலிமலை அருகே அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து 14 பவுன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story