ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா
x
தினத்தந்தி 22 March 2022 11:57 PM IST (Updated: 22 March 2022 11:57 PM IST)
t-max-icont-min-icon

9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்:
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
வரையறுக்கப்பட்ட அடிப்படை ஊதியம் பெற்று வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் ஊதியம் வழங்கிட வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளும் கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு வழங்கிட வேண்டும். 100 நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்களுக்கு இளநிலை உதவியாளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்து பணிவரன் முறை செய்திட வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிலையில் இருந்து உதவி இயக்குனர் நிலையிலான பதவி உயர்வு வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டம்  நடத்துவதாக அறிவித்திருந்தனர். அதன்படி நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோஷங்கள் எழுப்பினர்
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வசந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் வாசுதேவன், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தார். 
இதில் முன்னாள் மாநில துணைத் தலைவர் பூஷ்பநாதன், மாவட்ட செயலாளர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது கோரிக்கைகளை விளக்கி கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

Next Story