சோளிங்கரில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல்
சோளிங்கரில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
சோளிங்கர்
சோளிங்கர் நகராட்சிக்கு செலுத்தவேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடைகள், வாரச் சந்தை, தினசரி மார்க்கெட், பஸ் நிலைய கடைகள் மற்றும் ஆடு அடிக்கும் தொட்டிக்கான குத்தகை பணம் செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று சித்தூர் சாலையில் நகராட்சிக்கு சொந்தமான கடைகளில் 3 கடைகளுக்கு நீண்ட நாட்களாக செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இந்த 3 கடைகளுக்கு நகராட்சி ஆணையர் பரந்தாமன் தலைமையில் சீல் வைத்தனர். நகராட்சி ஊழியர்கள் எபினேசன், ஜெயராமன், வெங்கடேசன், சரன்ராஜ் மற்றும் நகராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story