முன்னாள் ராணுவ வீரரின் காரை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகள்
ஆரல்வாய்மொழி அருேக முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை சூறையாடி விட்டு காரை திருடி சென்றனர்.
ஆரல்வாய்மொழி,
ஆரல்வாய்மொழி அருேக முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் மர்ம நபர்கள் புகுந்து பொருட்களை சூறையாடி விட்டு காரை திருடி சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
முன்னாள் ராணுவ வீரர்
ஆரல்வாய்மொழி அருகே உள்ள வேல்முருகன் நகர் நடராஜர் தெருவை சேர்ந்தவர் அழகப்பபிள்ளை (வயது73). ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு அழகம்மாள் (68) என்ற மனைவியும், 1 மகனும், 1 மகளும் உள்ளனர். மகன் ஆஸ்திரேலியாவிலும், மகள் சென்னையிலும் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அழகப்பபிள்ளை வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு புறப்பட்டார். முன்னதாக பாதுகாப்பு கருதி வீட்டில் இருந்த நகைகளை வங்கி லாக்கரில் வைத்து விட்டு சென்றார். தனக்கு சொந்தமான சொகுசு காரை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் நேற்று காலையில் அழகப்பபிள்ளையின் வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து உறவினருக்கும், அழகப்பபிள்ளைக்கும் தகவல் கொடுத்தனர்.
மர்ம நபர்கள் கைவரிசை
பின்னர் இது குறித்து ஆரல்வாய்மொழி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் சார்லஸ் மற்றும் போலீசார் அங்கு வந்து பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பூஜை அறையில் இருந்த சாவிகளை காணவில்லை.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்த அனைத்து அறையின் சாவிகளையும், சொகுசு காரின் சாவியையும் எடுத்துள்ளனர்.
பின்னர் அனைத்து அறைகளிலும் இருந்த பீரோக்களை உடைத்து பொருட்களையும் துணிமணிகளை எடுத்து வெளியே வீசி பணம், நகை ஏதாவது இருக்கிறதா? என தேடினர். ஆனால் விைல உயர்ந்த பொருட்கள் எதுவும் அவர்கள் கையில் சிக்கவில்லை.
காரை திருடி சென்றனர்
இதனால், ஆத்திரமடைந்த திருடர்கள் வீட்டை சூறையாடிவிட்டு வீட்டின் முன்பு கார் செட்டில் நின்ற சொகுசு காரை திருடி சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், மோப்ப நாய் ஏஞ்சல் வரவழைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதுதொடர்பாக ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருடர்களை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story