ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு டி.வி. வழங்கிய முன்னாள் ஆசிரியர் குடும்பத்தினர்


ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு டி.வி. வழங்கிய முன்னாள் ஆசிரியர் குடும்பத்தினர்
x
தினத்தந்தி 23 March 2022 12:07 AM IST (Updated: 23 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு முன்னாள் ஆசிரியர் குடும்பத்தினர் டி.வி. வழங்கினர்.

அன்னவாசல்:
அன்னவாசல் இடையர்தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முன்பு பழனியப்பன் என்பவர் தலைமை ஆசிரியராக இருந்துள்ளார். இந்த நிலையில் அவரின் குடும்பத்தார் சார்பில் பள்ளி மாணவர்களின் மகிழ்ச்சியான கற்றலுக்கு உதவிடும் வகையில் 32 அங்குல டி.வி.யை நன்கொடையாக அளித்துள்ளார். இதில் ஆசிரியர் பயிற்றுனர், பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பெரியோர்கள் கலந்து கொண்டனர்.

Next Story