அரக்கோணம் சுடுகாட்டில் பயங்கர தீ


அரக்கோணம் சுடுகாட்டில் பயங்கர தீ
x
தினத்தந்தி 23 March 2022 12:07 AM IST (Updated: 23 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் சுடுகாட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

அரக்கோணம்

அரக்கோணம் நேருஜி நகர் பகுதியில் சுடுகாடு உள்ளது. நேற்று இரவு சுமார் 7 மணியளவில் சுடுகாட்டில் உள்ள புதருக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதில் தீ மளமளவென கொழுந்து விட்டு சுமார் பத்தடி உயரத்திற்கு எரிந்தது. சுடுகாடு பகுதி சுற்றிலும் குடியிருப்புகள் உள்ளன. உயர் அழுத்த மின் கம்பிகளும் செல்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின் தடை ஏற்படுத்தினர். தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story