பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்


பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 12:17 AM IST (Updated: 23 March 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூரில் பால் உற்பத்தியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர்

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம், மற்றும் தமிழ்நாடு பிரதம பால் கூட்டுறவு பணியாளர்கள் சங்கம் சார்பில் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பால் உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் எம்.சிவாஜி, பணியாளர்கள் சங்க மாவட்ட பொதுச்செயலாளர் ஜி.ரமேஷ்பாபு, உற்பத்தியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கோபு தலைமை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தை மாநில பொதுச்செயலாளர் முகமது அலி தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு திட்டத்தில் பால், பால் பவுடர் வழங்கிட வேண்டும், சங்க பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும், 

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.10 வீதம் உயர்த்தி பசும்பாலுக்கு ரூ.42, எருமைப் பால் லிட்டருக்கு ரூ.51 வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சக்திவேல், சி.ஐ.டி.யு. கன்வீனர் கேசவன் ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Next Story