பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது


பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது
x
தினத்தந்தி 23 March 2022 12:18 AM IST (Updated: 23 March 2022 12:18 AM IST)
t-max-icont-min-icon

போளூர் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் போதைக்கு அடிமையாகி இருந்தார். இவரது மனைவி சமீபத்தில் இறந்து விட்டார். 

இவருக்கு 19 வயதில் ஒரு மகனும், 17 வயதில் பிளஸ்-1 பயிலும் மகளும் உள்ளனர். மனைவி இறந்தபின் மகன், மகளுடன் அந்த நபர் வசித்து வந்தார்.

இந்த நிலையில் போதையில் வீடு திரும்பிய நபர் மகளை வலுக்கட்டாயமாக அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து களம்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன் சம்பந்தப்பட்ட மாணவியை ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மாணவியிடம் விசாரணை நடத்தியதில் அவரை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்தது உறுதியானது.

இதனையடுத்து மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைைய மகளிர் போலீசார் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தாய் இறந்தபின் காவலாக இருக்க வேண்டிய தந்தையே போதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story