காரைக்குடியில் வக்கீல் தம்பதி உள்பட 3 பேரை வீடு புகுந்து வெட்டிய கும்பல்
காரைக்குடியில் வக்கீல் தம்பதி உள்பட 3 பேரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்
காரைக்குடி,-
காரைக்குடியில் வக்கீல் தம்பதி உள்பட 3 பேரை வீடு புகுந்து சரமாரியாக வெட்டிய கும்பலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வக்கீல் தம்பதி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் குமரகுரு. இவருடைய மனைவி விஜயஸ்ரீ. இவர்கள் இருவரும் காரைக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணிபுரிந்து வருகின்றனர்.
குமரகுரு வீட்டின் எதிர் வீட்டில் காசி என்பவர் வசித்து வருகிறார். காசியும் அவரது மனைவியும் பிரிந்துவிட்டனர்.. இதற்கு குமரகுருதான் காரணம் என காசியின் தம்பி கணபதி (27) நினைத்துக்கொண்டு அவரது நண்பர் முத்துப்பாண்டி (24) மற்றும் இன்னொருவரை அழைத்துக்கொண்டு குமரகுரு வீட்டிற்குள் உருட்டுக்கட்டை, வாள் உள்ளிட்ட ஆயுதங்களோடு சென்றார்.
வீடு புகுந்து வெட்டு
அங்கு குமரகுரு வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த அவரது மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தினர். சத்தம் கேட்டு வெளியே வந்த குமரகுரு, அவரது மனைவி விஜயஸ்ரீ, வீட்டிற்கு வந்திருந்த மாரி ஆகியோரை ஆபாசமாக பேசி வாளால் சரமாரியாக வெட்டினர்.இதில் குமரகுரு, அவரது மனைவி விஜயஸ்ரீ, மாரி ஆகியோருக்கு கை, விரல் மார்பு, தலை ஆகிய இடங்களில் பலத்த ரத்தக்காயம் ஏற்பட்டது.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.காயமடைந்த 3 பேரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
2 பேர் கைது
இதுகுறித்த புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து கணபதி, முத்துப்பாண்டி ஆகியோரின் செல்போன் பதிவுகளைக்கொண்டு அவர்கள் பதுங்கியிருந்த இடங்களை கண்டறிந்து அவர்களை கைது செய்தனர். மேலும் ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story