பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 12:20 AM IST (Updated: 23 March 2022 12:20 AM IST)
t-max-icont-min-icon

ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை:
தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் அளித்தப்படி ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் புதுக்கோட்டை மாவட்ட கிளை சார்பில் புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜீவன்ராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில துணை தலைவர் செல்வேந்திரன், இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஆதிலட்சுமி, உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட தலைவர் குமரேசன் உள்பட பல்வேறு ஆசிரியர் சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்-ஆசிரியைகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Next Story