கிராம மக்கள் முற்றுகை போராட்டம்


கிராம மக்கள் முற்றுகை போராட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 12:22 AM IST (Updated: 23 March 2022 12:22 AM IST)
t-max-icont-min-icon

கிராம மக்கள் முற்றுகை போராட்டம்

கொள்ளிடம் டோல்கேட், மார்ச்.23-
திருச்சி நெ.1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை 147 மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஒருவரும், பட்டதாரி ஆசிரியர்கள் 5 பேரும், இடைநிலை ஆசிரியர்கள் இருவரும், சிறப்பு ஆசிரியர்களாக உடற்கல்வி மற்றும் தையல் என 2 ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்கள் 2 பேர் என மொத்தம் 15 பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் பாடவகுப்புகளை சரியாக நடத்துவதில்லை என்றும், தான்  நடத்த வேண்டிய பாட வகுப்புகளை ஆசிரியர் அல்லாத ஒரு பெண்ணை ரூ.3 ஆயிரம் சம்பளத்திற்கு அவரே தன்னிச்சையாக நியமித்து நடத்துவதாக குற்றம்சாட்டி அப்பகுதி கிராமமக்கள் நேற்று பள்ளி தலைமை ஆசிரியையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தலைமை ஆசிரிைய மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது தொடர்பாக திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளியிடம் கேட்டபோது, உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியர் ஏற்கனவே புகார் காரணமாக மற்றொரு ஊரில் இருந்து இடமாற்றம் செய்து இங்கே வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story