பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 12:25 AM IST (Updated: 23 March 2022 12:25 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மணப்பாறை, மார்ச்.23-
கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிராமப்புற தொழிலாளர் சங்கம்
மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தை காலை 10 மணிக்கு தொடங்கிட வேண்டும், தொழிலாளிகளுக்கு தேவையான மண்வெட்டி உள்ளிட்ட கருவிகளை அரசே வழங்கிட வேண்டும்.
100 நாள் வேலை திட்டத்தில் ஊழல் செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆசிரியர் கூட்டமைப்பு
இதேபோல் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திருச்சி மரக்கடை ராமகிருஷ்ணா பாலம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரின் ஆசிரியர் விரோதப் போக்கை கைவிட வேண்டும். அசைன்மெண்ட் என்ற பெயரில் மாணவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடாது. ஆய்வு கூட்டம் என இரவு 8 மணி வரை கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.  
இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில தலைவர் தியாகராஜன் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் செந்தில்குமார், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் பீட்டர் மைக்கேல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.
திருவெறும்பூர்
பெல் நிர்வாகத்தின் ஒரு பகுதியை தனியார் மயமாக்குவதை கண்டித்து நேற்று திருவெறும்பூர் பஸ் நிலையத்தில் அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி. போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் லோகநாதன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யு., தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story