விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 12:25 AM IST (Updated: 23 March 2022 10:13 AM IST)
t-max-icont-min-icon

உயர்கோபுரங்களில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களுக்கு இழப்பீடு கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பள்ளிபாளையம்:-

பள்ளிப்பாளையம் ஒன்றிய பகுதியில் உயர்மின் கோபுரங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்று காடச்சநல்லூரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயி செல்லமுத்து தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெருமாள் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் கிருஷ்ணகுமார், அருணாசலம், பழனிசாமி, சுப்ரமணியம், குலசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தின் போது உரிய இழப்பீடு தொகை 2013-ம் ஆண்டு சட்டப்படி நிர்ணயம் செய்து வழங்க வேண்டும். மரம் பயிர்களுக்கான இழப்பீட்டையும் வழங்க வேண்டும். போர்வெல், கிணறு மற்றும் கட்டுமானங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Next Story