கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு
கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
நாமக்கல்:-
கோழிகளுக்கு வெள்ளைகழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு இல்லை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 73.4 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு 4 கி.மீ.வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் குறைந்தபட்சமாக 50 சதவீதமாகவும், அதிகபட்சமாக 70 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் தற்போது நிலவும் வானிலையில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்நோயின் அறிகுறிகள் கோழிகள் தலையை ஒரு பக்கமாக சாய்த்து கொள்ளுதல், கழிச்சல் மற்றும் முட்டைகளின் எண்ணிக்கை குறைந்து இறப்பு ஏற்படும்.
வெள்ளை கழிச்சல் நோய்
பொதுவாக நாட்டுகோழி வளர்ப்பு விவசாயிகள், வெள்ளை கழிச்சல் நோய்க்கு எதிராக கோழிகளுக்கு தடுப்பூசி அளிக்க வேண்டும். மேலும் வெள்ளைகழிச்சல் நோய் நாட்டு கோழிகளுக்கு வராமல் தடுக்க தடுப்பூசியுடன் மூலிகை மருத்துவ முறைகளையும் பயன்படுத்தலாம். சீரகம், மிளகு, மஞ்சள்பொடி, சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் கீழாநெல்லி ஆகியவற்றை அரைத்து சிறு, சிறு உருண்டைகளாக மாற்ற வேண்டும். அவற்றை தீவனம் மற்றும் அரிசி குருணையில் கலந்து கொடுக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story