லாரி மோதி தொழிலாளி பலி
குடவாசல் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
குடவாசல்:
குடவாசல் அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார். இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மணக்காலில் அறுவடை பணி
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே மணக்கால் பகுதியில் சம்பா அறுவடைக்காக மணக்காலை சேர்ந்த வினேஷ், துரைசிங்கம் ஆகியோர் கர்நாடகாவில் இருந்து கதிர் அறுக்கும் எந்திரத்தை வரவழைத்தனர்.
அந்த எந்திரத்தின் உரிமையாளரும், டிரைவருமான ரைசூர் மாவட்டத்தை சேர்ந்த பிச்சப்பா மகன் எமனூரப்பா (வயது25), இவரின் உதவியாளராக அதே ஊரை சேர்ந்த அய்யப்பன் மகன் ஹனுமேஷ் (18) இருவரும் கடந்த 45 நாட்களாக மணக்காலில் அறுவடைப்பணியை செய்து வந்தனர்.
லாரி மோதி தொழிலாளி பலி
கடந்த 20-ந்தேதி இரவு 10 மணி அளவில் அறுவடை எந்திரத்தை நிறுத்திவிட்டு அறுவடை எந்திரத்தை ஏற்றி வந்த லாரியை பின்புறமாக எமனூரப்பா இயக்கி உள்ளார். அப்போது லாரியின் பின்புறம் நின்று கொண்டிருந்த உதவியாளர் ஹனுமேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஹனுமேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து ஹனுமேசின் உறவினர் திம்மண்ணா கொடுத்த புகாரின்பேரில் குடவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாநிதி வழக்குப்பதிவு செய்து, விபத்தில் பலியான ஹனுமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்.
டிரைவர் கைது
மேலும் இதுதொடர்பாக நெல் அறுவடை எந்்திரத்தின் டிரைவர் எமனூரப்பாவை கைது செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இதுகுறித்து கர்நாடகாவில் உள்ள குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து கதறி அழுதனர்.
Related Tags :
Next Story