மவுண்ட் சீயோன் பொறியியல்- தொழில்நுட்பக் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா


மவுண்ட் சீயோன் பொறியியல்- தொழில்நுட்பக் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா
x
தினத்தந்தி 23 March 2022 12:34 AM IST (Updated: 23 March 2022 12:34 AM IST)
t-max-icont-min-icon

மவுண்ட் சீயோன் பொறியியல்- தொழில்நுட்பக் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே லேணாவிலக்கில் உள்ள மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. முதலில் கல்லூரி வேலைவாய்ப்பு அதிகாரி ஓ.டி.ஜான் இறைவணக்கம் செய்தார். விழாவிற்கு மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் தலைமை தாங்கி பேசினார். கல்லூரி இயக்குனர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் வாழ்த்துரை வழங்கினார். அகடெமிக் கோ-ஆர்டினேட்டர் பேராசிரியர் விவியன் ஜெய்சன் வரவேற்றார். கல்லூரியின் டீன் ஐ.சி.டி. ராபின்சன், சிறப்பு விருந்தினர் இந்திய செயற்கை கோள் மையம் முன்னாள் இயக்குனர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரையை அறிமுகம் செய்தார். மவுண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரன்ஸ் ஜெயபாரதன் சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசு வழங்கினார்.  சிறப்புவிருந்தினர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசுகையில், மாணவர்கள் உயரிய எண்ணங்களை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார். உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேற்ப்பாதையில் சென்று உயர் பதவிகளை வகிக்க வேண்டும் என்று பேசினார். கல்லூரி முதல்வர் பி.பாலமுருகன் பட்டம் பெறும் மாணவ, மாணவிகளை அறிமுகம் செய்தார். 2019 மற்றும் 2020-ம் ஆண்டு பட்டப்படிப்பை 645 மாணவ-மாணவிகள் வெற்றிகரமாக முடித்து இவ்விழாவில் பட்டம் பெற்றனர். இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக அளவில் ரேங்க் பெற்றுள்ளார். 5 பேர் டிஸ்டிங்ஷன் பெற்றுள்ளனர். 526 பேர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதைத்தொடர்ந்து சிவில் என்ஜினீயரிங் துறையில் 159 பேரும், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங் துறையில் 108 பேரும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் துறையில் 110 பேரும், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் 60 பேரும், மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறையில் 172 பேரும், எம்.இ.கம்யூனிகேஷன் சிஸ்டம் 16 பேரும், எம்.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங் துறையில் 4 பேரும், எம்.இ.பவர்எலக்ட்ரானிக்ஸ் அண்டுட்ரைவ்ஸ் 2 பேரும், எம்.இ.ஸ்ட்ரக்ச்சுரல் என்ஜினீயரிங் 14 பேரும் பட்டம் பெற்றனர். முடிவில் கல்லூரி வேலைவாய்ப்பு டீன் மோகன் நன்றி கூறினார்.

Next Story