சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும்
கோட்டூர் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோட்டூர்:
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலப்பனையூரில் இருந்து கோட்டூர் செல்லும் சாலையில் கோமாளபேட்டை என்ற இடத்தில் பாசன வாய்க்காலில் சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் ஒரு பகுதியில்பள்ளம் ஏற்பட்டு உள்ளது. 50-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் இந்த பாலத்தின் வழியாகத்தான் கோட்டூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய நகரங்களுக்கு சென்று வரக்கூடிய போக்குவரத்து மிகுந்த சாலையாகும். இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் விழுந்து விபத்துக்கு உள்ளாகிறார்கள் மேலும் முள்ளி ஆற்றில் இருந்து பிரிந்து செல்லும் இந்த பாசன வாய்க்கால்கள் மூலம் தான் பள்ளிசந்தம் செல்லப்பிள்ளையார் கோட்டகம், அழகிரி கோட்டகம் ஆகிய பகுதிகளுக்கு மேட்டூர் அணை தண்ணீர் சாகுபடிக்கு செல்லுகிறது. எனவே இந்த பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விரைவில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story