நூல் வெளியீட்டு விழா
இளையான்குடி பெண்கள் மேலப்பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடி பெண்கள் மேலப்பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு இளையான்குடி மேல்நிலைப்பள்ளி செயலாளர் முசாபர் அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். மேலப்பள்ளிவாசல் மேனேஜிங் டிரஸ்டி காதர் மீரா முன்னிலை வகித்தார். அகமது திப்பு சுல்தான் எழுதிய பூப்பெய்தாத புன்னகையும் புடம்போட்ட கண்ணீரும்"எனும் நூலை ஓய்வுபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியை சகுந்தலா வெளியிட ஓய்வுபெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியை லலிதா பெற்றுக்கொண்டார்.
விழாவில் பேராசிரியர்கள் செய்யது உசேன், செய்யது அபு தாஹீர், தமிழ் கலை ஆசிரியர் ஜீவசித்தன், சிவகங்கை பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மரியா ஜெயபாரதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தமிழ் மதுரை அறக்கட்டளை தலைவர் சித்தார்த் பாண்டியன் சிறப்புரை ஆற்றினார். டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி பேராசிரியர் முகமது இப்ராஹிம் மதிப்புரை வழங்கினார். முடிவில் ஆசிரியர் முஹம்மது இஸ்மாயில் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story