“கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் குடும்பத்தில் மாத செலவு அதிகரிக்கும்”-இல்லத்தரசிகள் வேதனை
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் குடும்பத்தில் மாத செலவு அதிகரிக்கும் என்று இல்லத்தரசிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
சிவகங்கை,
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வால் குடும்பத்தில் மாத செலவு அதிகரிக்கும் என்று இல்லத்தரசிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு
தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானதை ெதாடர்ந்து நேற்று முதல் பெட்ேரால், டீசல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. கியாஸ் சிலிண்டரும் ரூ.50 விலை அதிகரித்து உள்ளது. இதனால் இல்லத்தரசிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
கயல்விழி பாண்டியன் (குடும்பத்தலைவி, சிவகங்கை):-
ஏற்கனவே கியாஸ் சிலிண்டர் விலை ரூ.1000 ஆக உள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். தற்போது குக்கிராமம் உள்பட அனைத்து இடங்களிலுமே சிலிண்டர் பயன்பாடு என்பது அதிகமாக உள்ளது. இந்நிலையில் சிலிண்டரின் விலையை மேலும் ரூ.50 உயர்வு காரணமாக குடும்பத் தலைவிகள் மிகவும் அல்லல்படுவார்கள். இதனால் பெரும்பாலான குடும்பத்தில் இனி வரும் காலங்களில் கியாஸ் அடுப்பு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை, எளிய மக்கள் பாதிப்பு
இளங்கோவன் (டீக்கடை நடத்துபவர், காரைக்குடி):-
மத்திய அரசு தொடர்ந்து பொதுமக்களின் அன்றாட தேவையாக உள்ள பெட்ரோல், டீசலை விலையை ஏற்றி பெரும் சிரமத்திற்கு கொண்டு வருவதை போல் தற்போது ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் கியாஸ் சிலிண்டர் விலையையும் ஏற்றி உள்ளது மக்களின் வயிற்றில் தீயை பற்ற வைப்பதற்கு சமமானதாகும். வீடுகளில் பயன்படுத்தும் சிலிண்டர் விலை ஏற்றத்தால் ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர என்னை போல் டீ கடை மற்றும் ஓட்டல் வைத்து நடத்தி வருபவர்கள் பயன்படுத்தும் சிலிண்டர் ஏற்கனவே ரூ.2ஆயிரம் வரை இதற்கு முந்தைய காலக்கட்டத்தில் கொடுத்து வந்த நிலையில் தற்போது ரூ.200 வரை கூடுதலாக கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
குடும்ப ெசலவு அதிகரிக்கும்
தனலெட்சுமி (குடும்பத்தலைவி, செட்டிக்குறிச்சி):-
வீட்டு உபயோக சிலிண்டர் 50 ரூபாய் உயர்வு என்பது எங்களை போன்ற நடுத்தர குடும்ப பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியாக உள்ளது. மாத வருமானத்தில் ஒரு பங்கு இதற்கு என்றே ஒதுக்க வேண்டியது உள்ளதால் மாத செலவு அதிகரித்து வருகின்றது. மத்திய அரசு இந்த விலை உயர்வை மறு பரிசீலனை செய்தால் நடுத்தர குடும்ப பெண்களுக்கு சிக்கனமாக அமையும்.
சுந்தரம் (குடும்பத்தலைவி, சிங்கம்புணரி) - நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமாக கியாஸ் சிலிண்டர் விலையேற்றம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. முதன் முதலில் கியாஸ் மானியத்தில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது நடுத்தர மக்களால் கியாஸ் சிலிண்டர் வாங்க முடியாத அளவிற்கு விலை உயர்ந்து வருகிறது. இதனால் நமது முன்னோர்கள் பயன்படுத்தியதை போல் மீண்டும் விறகு அடுப்பிற்கு மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
Related Tags :
Next Story