ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2022 1:00 AM IST (Updated: 23 March 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கையில் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிவகங்கை, 

ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணி மேற்பார்வையாளர் பணியிடங்கள் அனைத்தையும் தேர்வாணையம் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட நிர்வாக நிதியினை மேலும் காலதாமதம் இன்றி அனைத்து வட்டாரங்களிலும் உடனடியாக விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்டதலைவர் வேலுச்சாமி தலைமையில் சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இ்தில் மாநில செயலாளர் சிவக்குமார், மாவட்டசெயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்டபொருளாளர் பெரியசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story