உயர் கோபுர மின் விளக்கு விழுந்ததில் ஊழியர் படுகாயம்


உயர் கோபுர மின் விளக்கு விழுந்ததில் ஊழியர் படுகாயம்
x
தினத்தந்தி 23 March 2022 1:09 AM IST (Updated: 23 March 2022 1:09 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகாில் உயர் கோபுர மின் விளக்கு விழுந்ததில் ஊழியர் படுகாயம் அடைந்தார்.

விருதுநகர், 
விருதுநகர் தேசபந்து திடலில் உள்ள உயர் கோபுர மின் விளக்கு பழுதாகி இருந்தது. இதையடுத்து அதை பழுது பார்க்கும் பணியில் மணி நகரைச் சேர்ந்த பாலதினேஷ் (வயது21) என்ற ஊழியர் ஈடுபட்டார். அப்போது திடீரென அவர் மீது உயர் கோபுர மின் விளக்கு விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர் தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். 


Next Story