உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
அருப்புக்கோட்டை அருகே உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அருப்புக்கோட்டை,
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கப்பட்ட அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் வெள்ளையாபுரம் ஊராட்சியில் உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெள்ளையாபுரம் அரசுப்பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுடன் தண்ணீர் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டார். மேலும் பள்ளி வளாகத்தில் மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நட்டார். அதனை தொடர்ந்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் நடைபெற்று வரும் கண்மாய் தூர்வாருதல், மழை நீர் சேமிப்பு தொட்டி அமைத்தல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளையும் கலெக்டர் மேகநாதரெட்டி ஆய்வு செய்தார். ஆய்வின்போது ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், தாசில்தார் அறிவழகன், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story