வக்கீல் உள்பட 9 பேருக்கு ஆயுள்தண்டனை
கடந்த 2014-ம் ஆண்டில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 9 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
மதுரை
கடந்த 2014-ம் ஆண்டில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் வக்கீல் உள்பட 9 பேருக்கு ஆயுள்தண்டனை விதித்து மதுரை மாவட்ட கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பளித்தது.
அ.தி.மு.க. பிரமுகர் கொலை
மதுரை தெற்கு 3-ம் பகுதி அ.தி.மு.க. இளைஞரணி இணைச்செயலாளராக இருந்தவர் அழகர்சாமி (வயது 49). இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம்.
அங்கு கருவேல மரங்கள் குத்தகைக்கு எடுப்பதில் இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்தது.
இந்தநிலையில் கடந்த 2014-ம் ஆண்டு 10 பேர் கும்பலால் அழகர்சாமி கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தின்போது கொலை கும்பலை சேர்ந்த நிரஞ்சன் என்பவர் மீதும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.
9 பேருக்கு ஆயுள்
இந்த கொலை தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த விஜய லிங்கம், சோலைராஜ், ராமசாமி, அலெக்ஸ்பாண்டி, நீதிராஜன் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் நீதிராஜன் வக்கீல் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு மதுரை மாவட்ட 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது. அரசு தரப்பில் வக்கீல் எஸ்.கருணாநிதி ஆஜரானார்.
முடிவில் இந்த வழக்கில் விஜயலிங்கம், சோலைராஜ், ராமசாமி, அலெக்ஸ்பாண்டி, நீதிராஜன், முனியசாமி, மற்றொரு அலெக்ஸ்பாண்டி, ரஞ்சித்குமார், நித்யானந்த் ஆகிய 9 பேருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ரவி நேற்று தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story