மது விற்றவருக்கு வலைவீச்சு
மது விற்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் கீழநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பெருமாள் குளத்தின் கரையில் ஒருவர் மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி அந்த இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு மது விற்று கொண்டிருந்த நபரை மடக்கிப் பிடித்து கைது செய்ய முயன்றனர். ஆனால் போலீசாரை கண்டவுடன் அந்த நபர் விற்பனை செய்து கொண்டிருந்த மதுபாட்டில்களை அந்த இடத்திலேயே போட்டுவிட்டு தப்பியோடி விட்டார். அவர் விட்டுச் சென்ற பையை போலீசார் சோதனை செய்தபோது அதில் 50 மதுபாட்டில்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நபரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story