அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்ட அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் பஸ் நிலைய பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தண்டபாணி, தொ.மு.ச. மாவட்ட கவுன்சில் தலைவர் மகேந்திரன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் துரைசாமி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் மீதான கலால் வரியை குறைத்து அனைத்து பொருட்களின் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். தொழிலாளர் சட்டங்களை திருத்துவதை கைவிட வேண்டும். வருவாய் குறைந்த குடும்பங்களுக்கு ரூ.7 ஆயிரத்து 500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதை தவிர்க்க வேண்டும். புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story